தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
நடிகர் விஜயின் தனது தமிழக வெற்றி கழகத்திற்கான கொடியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியில் உள்ள யானைச் சின்னம் மற்றும் கொடியின் வடிவமைப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் அங்கீகரம் வழங்க தமிழக வெற்றி கழகம் கேட்டு வந்தது. இந்நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்திற்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் மற்றும் மாநாடு நடத்திட அனுமதி வழங்கிய மாநில காவல்துறைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஆணைப்படியும் ,பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் உத்தரவின் பெயரில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் ஜெ.ஜெ. செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கோஷங்கள் எழுப்பி உற்சாகமாக இதை கொண்டாடினர்.
Next Story