பிரியாணி கடையில் குவிந்த பொதுமக்கள்
Pallipalayam King 24x7 |8 Sept 2024 7:52 PM ISTதள்ளுபடி விலையில் பிரியாணி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் பிரியாணி கடையில் குவிந்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் சாலையில் நான்கு ரோடு அருகே புதிதாக பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு ₹100 ரூபாய்க்கு ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மற்றொன்று இலவசம் எனவும், கடைத்திறப்பு விழா நாள் அன்று மட்டும் இந்த ஆஃபர் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது . இதனை அடுத்து காலை முதலே ஏராளமான வாடிக்கையாளர்கள் பிரியாணி கடையில் குவிந்தனர். கடை உரிமையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் வழங்கி முறைப்படுத்தினர்.இருந்த போதிலும் தகவல் மேலும் பரவி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அதிக அளவு பொதுமக்கள் தள்ளுபடி விலையில் பிரியாணி வாங்க கடையின் முன்பு குவிந்ததால் பேருந்து நிலைய சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ,சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது..
Next Story


