களக்காடு பழமை வாய்ந்த கோவிலில் கட்டுமான பணி
Tirunelveli King 24x7 |9 Sep 2024 3:59 AM GMT
கட்டுமான பணி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் தலைமை பதியாக விளங்கும் இந்த கோவிலில் கலியறுக்கும் பரந்தாமன் நரசிம்ம அவதார மூர்த்தியாக வீற்றிருப்பது சிறப்பு மிக்கதாகும். இந்த கோவிலில் ராஜகோபுரம் கட்ட பக்தர்கள் முடிவு செய்து 108 அடி உயரத்தில் ஒன்பது நிலைகளுடன் கூடிய புதிய ராஜகோபுர கட்டுமான பணிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story