ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டம்..
Rasipuram King 24x7 |10 Sep 2024 2:24 PM GMT
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டம்..
தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பி.சரவணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் பி.சுரேஷ்குமார், வட்டச் செயலர் பி.ஜெகதீஸ்குமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.நல்லியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற துறை பணிகளை நிர்வாக அலுவலர்கள் மீது திணிக்கும் வருவாய்த்துறை கைவிட வேண்டும். வேளாண்மைத்துறை பணியான டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை விஏஒ-க்கள் மீது திணிக்கக்கூடாது. கடந்த 08.01.2024-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும். சர்வே பணிக்கு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story