உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசளிப்பு விழா முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24 வது ஆண்டாக நடைபெற்றது இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார் விழாவில் 2023-2024 ஆம் ஆண்டில் கல்லூரி அளவில் துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ.3000 , சான்றிதழும் வழங்கப்பட்டன மேலும் பல்கலைக்கழக தேர்வில் பெற்ற 15 பேருக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டன.மேலும் வணிகவியல் துறை முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சபரீஷ்வரிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது ஓய்வு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவரும் சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆடிட்டர் கந்தசாமி, ஆடிட்டர் கண்ணன் , ராஜமாணிக்கம், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் முனைவர் கிருஷ்ணன் பேராசிரியர் முகமது ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






