வியாபாரிகள் தங்கள் அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் ஆர்ப்பாட்டம்
Dindigul King 24x7 |10 Sep 2024 4:19 PM GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உட்பட்ட அடிவாரம், கிரிவலம் பாதை, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் அவதி அடைவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் கிரிவலப் பாதையில் எந்த விதமான ஆக்கிரமிப்பு கடைகளும், தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் எதுவும் இருக்கக் கூடாது உடனடியாக அகற்ற வேண்டும் கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்றை அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து முழுவதுமாக அகற்றப்பட்டு வந்தது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், கடை வியாபாரிகள், சிறு குறு வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மண் என் உரிமை என்று சாலை யோர வியாபாரிகள் சார்பில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது பழனி சாலையோர வியாபாரிகள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
Next Story