வருமானமே இல்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் கஷ்டப்படும் தாய்
வருமானமே இல்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் கஷ்டப்படும் தாய்
உத்திரமேரூர் அருகே கணவனை இழந்து மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தனியாக சிரமத்துடன் வாழ்ந்து வரும் இளம் பெண் அரசுக்கு வேலை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் குன்னவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டவாக்கம் கிராமத்தில் தாமரை குளம் தெருவில் வசித்து வருபவர் மலர் வயது 26 .
இவருக்கும், சென்னை அருகே திருநின்றவூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் 2017 ல் திருமணமாகி மலர் கணவருடன் வசித்து வந்த நிலையில் லோகநாதனுக்கு மஞ்சள் காமாலை நோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். மலருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு வயது உடைய பூவதர்ஷினி, யூகேஸ்வரன் ஏன்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.
இதில், யுகேஸ்வரன் மூளை வளர்ச்சி இன்றி கை கால்கள் நடக்க முடியாமல் மாற்றுத்திறனாளி குழந்தையாக உள்ளார். இந்த நிலையில் கணவர் இழந்த மலர் குடும்ப சூழ்நிலை காரணமாக பாண்டவாக்கத்தில் தாய் வீட்டின் அருகே மாற்றுத்திறனாளி கைக்குழந்தை வைத்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். அவருக்கு வருமானம் எதுவும் இல்லாததால் குழந்தைகளை கவனிக்க கடும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றார். எனவே, வருமானம் ஏதும் இன்றி மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசிக்கும் மலர் அரசுக்கு வேலை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.