உலக இருதய நாளை முன்னிட்டு அப்போல்லோ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக இருதய நாளை முன்னிட்டு அப்போல்லோ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக இருதய நாளை முன்னிட்டு அப்போல்லோ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூரில் செயல்படும் அப்போலோ மருத்துவமனை சார்பில், இன்று உலக இருதய தினத்தை முன்னிட்டு கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே, கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு இதயம் தன்னுடைய செயல்பாட்டை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இதயத்தில் சுத்திகரிக்கப்படும் ரத்தம் உடல் முழுவதும் சென்றால் தான் உடல் சீராக இயங்கும். அத்தகைய மதிப்பு வாய்ந்த இதயத்தை ஒவ்வொரு மனிதரும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தீய பழக்கவழக்கங்களினால் இதயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாயிலாக வெளிப்படுத்துவதற்காக, இன்று கரூர் அப்பல்லோ மருத்துவமனை, சக்தி நர்சிங், ஜெயம் மதி நர்சிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர், இதய வடிவிலான சிகப்பு நிற பலூன்களை கையில் ஏந்தியவாறு கரூர்- கோவை சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வரை ஊர்வலம் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் ஸ்ரீதர், இதய நிபுணர் கேசவன், மருத்துவமனை நிர்வாகி முத்துப்பாண்டி, மக்கள் செய்தி தொடர்பாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உலக இருதய தின விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.
Next Story