உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம்: நிர்வாகிகள் கொண்டாட்டம்..

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம்: நிர்வாகிகள் கொண்டாட்டம்..
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம்: நிர்வாகிகள் கொண்டாட்டம்..
ராசிபுரத்தில் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை திமுக.,வினர் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் என் ஆர் சங்கர் தலைமையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதியில் திமுக.,வினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இதே போல் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர் அணியினர், கவுன்சிலர்கள், மூத்த முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story