அனைவரின் மனதையும் நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!!
NAMAKKAL KING 24X7 B |30 Sept 2024 11:53 AM ISTஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆட்சியரின் பேரன் : மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் தயங்கும் சூழலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய பேரனை நாமக்கல் அரசு மருத்துவம னையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார் மாவட்ட ஆட்சியர் ச.உமா. மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது குழந்தைகளை பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவழிக்கின்றனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடாமல் தனியார் மருத்துவமனைகளுக்கே இவர்கள் செல்கின்றனர். இந்த நிலையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையிலும், தன்னுடைய மகள் வழி பேத்தியை அங்கன்வாடியில் சேர்த்து கல்வி பயில வைக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, அண்மையில் தன்னுடைய 3 மாத பேரன் சளித்தொல்லையால் உடல் நலம் குன்றியபோது, தனியார் மருத்துவமனையை நாடாமல், அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது குழந்தை உடல் நலம் தேறியுள்ளது. இவரது அணுகுமுறை அரசு உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
Next Story


