உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.,
உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு பொள்ளாச்சி., அக்டோபர்.,04 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட உப்பாறு பகுதியில் உள்ள அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உப்பாறு பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்,  இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்து பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி வந்த நிலையில் உப்பாறு ஆணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி உப்பாறு பகுதி சேர்ந்த விவசாயிகள் நேற்று முதல் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,. இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நீர்வளத் துறை அதிகாரியிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பதிலும் அளிப்பதில்லை எனவும், அரசாணை, நீதிமன்ற வழக்கு தீர்ப்பு போன்ற ஆவணங்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நீர் வள த்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் மெத்தனப்போக்கில் செயல்படுவதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குற்றம் சாட்டினர்., மேலும் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடும் வரையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை விடுவதில்லை எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  பேட்டி- சிவகுமார், உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.,
Next Story