சுற்றுலாத்துறை, மற்றும் சர்க்கரை உற்பத்தி துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்களுக்கு வரவேற்பு..

X
Rasipuram King 24x7 |13 Oct 2024 1:53 PM ISTசுற்றுலாத்துறை, மற்றும் சர்க்கரை உற்பத்தி துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்களுக்கு வரவேற்பு..
அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை, மற்றும் சர்க்கரை உற்பத்தி துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்களுக்கு வெண்ணந்தூர் ஒன்றிய கழகத்தின் சார்பாக மல்லூர் வெற்றி விகாஸ் அருகில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான ஆர்.எம்.துரைசாமி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.ராமசாமி, வெண்ணந்தூர் பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான RSS.ராஜேஷ், அத்தனூர் பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான K.கண்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் D.விஜயபாஸ்கரன், வெண்ணந்தூர் ஒன்றிய கழக துணை செயலாளர் A.பழனிவேல், மாவட்ட பிரதிநிதி M.அரிதேவன், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் KC.ரவீந்தர், வெண்ணந்தூர் ஒன்றியக்குழு உறுப்பினர் புதுப்பாளையம் நாராயணசாமி, சார்பு அணி நிர்வாகிகள் ரவி, அன்பு, அஜித், அருண்குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
