விபத்தில் மரணம் அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் : அரசு மரியாதையுடன் தகனம்!
Thoothukudi King 24x7 |14 Oct 2024 2:40 AM GMT
சாத்தான்குளம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சாத்தான்குளம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளத்தை சேர்ந்தவர் வீரபாகு மகன் மந்திரமூர்த்தி என்ற நயினார் (50). இவருக்கு மனைவி பேச்சியம்மாள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவர் திசையன்விளையில் உள்ள மரக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தினமும் பைக்கில் திசையன்விளை சென்று பணி முடிந்தும் வீடு திரும்புவது வழக்கம். அதேபோல் கடந்த 10 ஆம்தேதி பைக்கில் திசையன் விளையில் பைக் மோதியதில் பலத்த காயம் அடைந்தார. இதனையடுத்து நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். அவர் மரணம் அடைந்ததை ஒட்டி அவர் உடல் உறுப்புகளை தானம் செய்திருந்தார். இதனை யடுத்து அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குளத்திற்கு அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் கோட்டட்சியர் சுகுமாரன், சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜாஸ்மின் மேரி, கந்தவல்லி குமார், முத்துராமலிங்கம், பிரம்மகனி, புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலமேனன் ஆகியோர் அவரது சடலத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனை யடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story