மழையில் நனைந்தபடி குடை பிடித்து படி செல்லும் மாணவ மாணவிகள்!

மழையில் நனைந்தபடி குடை பிடித்து படி செல்லும் மாணவ மாணவிகள்!
தூத்துக்குடியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் காலை 6 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிக கனமழை முதல் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுவதுடன் பரவலாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் குடைகளை பிடித்தபடி பள்ளிக்கு செல்கின்றனர். இந்நிலையில் காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 46.50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கோவில்பட்டி கழுகுமலை சூரங்குடி எட்டையாபுரம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
Next Story