குருமலை கிராமத்தில் பட்டா வழங்க கிராம மக்கள் கோரிக்கை!

குருமலை கிராமத்தில் பட்டா வழங்க கிராம மக்கள் கோரிக்கை!
குருமலை கிராமத்தில் வீடுகளை காலி செய்ய வனத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து, பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே குருமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "நாங்கள் குருமலை வி.பி., சிங் நகரில் வீட்டுத் தீர்வை, மின் இணைப்பு பெற்று 35 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதிக்கும் வனத்துறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் எங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என் வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் ஏழை கூலித் தொழிலாளி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வனத்துறை நோட்டீஸை ரத்து செய்து உடனடியாக பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story