கரூரில் ஜவுளி வார சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்.

கரூரில் ஜவுளி வார சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்.
கரூரில் ஜவுளி வார சந்தை அமைக்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள். கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் 650 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் தலையணை, உறைகள், மேஜை விரிப்புகள், கைக்குட்டை, சோபா விரிப்பு, ஸ்கிரீன், துண்டு போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் இந்த பொருட்கள் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல உள்ளூர் நிறுவனங்கள் வெளி மாநில, மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூர் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய வெளி மாவட்ட சந்தைகளே நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஜவுளி உற்பத்தியாளர்கள், இங்கு உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் வெளி மாவட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை போல, கரூர் மாவட்டத்திலும் ஜவுளி வார சந்தை அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story