விடுமுறை நாளான இன்று பூலாம்பட்டி படகுதுறையில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான இன்று பூலாம்பட்டி படகுதுறையில் குவிந்த மக்கள்
தீபாவளி தொடர் விடுமுறையை தொடர்ந்து சேலம் மாவட்டம் பூலாம்பட்டி படகு துறையில் சுற்றிப் பார்க்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் வழியாக நெரிஞ்சிபேட்டைக்கும் இடையே விசைபடகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  இங்கு இயக்கப்படும் படகில் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் மிகு மலை சார்ந்த பகுதியை கண்டு ரசிக்க விசைபடகில் சென்று வருகின்றனர். சிலர் விசைப்படகை வாடகைக்கு எடுத்து குடும்பம் குடும்பமாக படகில் சென்று இயற்கை எழில் சூழ்ந்த காவிரிஆற்றின் அழகை ரசித்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் பூலாம்பட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.படகில் செல்ல கூட்டம் அலைமோதியது.ஒருநபர் படகில் சென்று திரும்ப 50 ரூபாயும்,7நபர்கள் 20நிமிடம் படகில் சென்றுவர 700ரூபாயும் கட்டணமாக வசூலழிக்க பட்டன.படகில் செல்ல மணிகணக்காக காத்திருந்து படகுசாவாரிசெய்து மகிழ்ந்தனர். இதனால் பூலாம்பட்டி பேரூராட்சி படகு துறை விழா கோலம் கொண்டது.
Next Story