எடப்பாடியில் காங்கிரஸ் வளர்ச்சி திட்ட தொடக்க விழா மாநாடு

எடப்பாடியில் காங்கிரஸ் வளர்ச்சி திட்ட தொடக்க விழா மாநாடு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கிராம காங்கிரஸ் வளர்ச்சி திட்ட தொடக்க விழா மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பூரண மதுவிலக்கு கோரி மத்திய அரசை வலியுறுத்தி சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாநாடு எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே கலந்துகொண்டு கிராம கமிட்டி வழங்க திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே வி தங்கபாலு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர்கள் ஜெயக்குமார், பாஸ்கர், அர்த்தநாரி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில செயலாளர் கார்த்திக் தங்கபாலு, மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எடப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள கர்மவீரர் காமராஜர், மகாத்மா காந்தி ஆகியோரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தனர். இந்தக் கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு பேசும் போது  தமிழ்நாடு காங்கிரசை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை மதிக்கிறேன் பாராட்டுகிறேன் ஏனென்றால் இந்தியாவிலேயே பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும் காமராஜர் இந்திரா காந்தி ராஜீவ் காந்தி பெயரை காங்கிரஸ் கொடியை ஏந்துகின்ற உங்களைப் போல் இந்தியாவில் யாரும் இல்லை நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களுக்கான கட்சி என்பதை மறப்பதில்லை நாட்டின் சுதந்திரத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அஸ்திவாரம் போட்டவர்கள் நாம் எனவும் இந்தியாவிலேயே யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினராகலாம் அமைச்சராகலாம் முதலமைச்சராகலாம் என்ற ஜனநாயகத்தை உருவாக்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி அந்த உரிமையை வேறு யாரும் கொண்டாட முடியாது அந்த அடிப்படையில் நம் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் இன்னும் 30 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் அவர்தான் பிரதமராக இருந்திருப்பார் ஆனால் பிஜேபியின் சூழ்ச்சியால் வஞ்சகத்தால் 71 இடங்களிலே கிடைத்த வெற்றியை மாற்றி திருட்டுத்தனமாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.  இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே  பேசியதாவது, கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை ஸ்டராங் படுத்த வேண்டும். கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தினால் காங்கிரஸ் கட்சி பலப்படும் .இல்லையெனில் காங்கிரஸ் கட்சிபலம் பெறாது. தொண்டர்கள் தான் காங்கிரஸ் கட்சி. நீங்கள் தான் காங்கிரஸ் கட்சி.   நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்தான் காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும். மோடி பெட்ரோல் டீசல் விலை குறைக்கிறேன் அது செய்கிறேன் இது செய்கிறேன் என கூறினார் ஒன்றும் செய்யவில்லை.அவ்வளவு அழகாக மோடி பொய் கூறுகிறார். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி காங்கிரஸ் கட்சி  என்னவோ செய்திருக்கிறது. நமக்கு இன்னொரு காமராஜர் வேண்டும் இன்னொரு பெரியார் என்று அதற்காகத்தான் கிராமம் நோக்கி   செல்கிறோம்.  கிராமம் ஸ்ட்ராங்காக இருந்தால் காங்கிரஸ் ஸ்ட்ராங்காக இருக்கும். காங்கிரஸ் ஸ்ட்ராங்காக இருந்தால் இந்தியா ஸ்ட்ராங்காக இருக்கும். இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என பிரிவினை பார்க்க கூடாது. அனைவரும் சேர்ந்து கட்சியை வளர்க்க வேண்டும். தொடர்ந்து நான் வருவேன். வாய்ப்பு இல்லாதவர்கள் முன்னுக்கு வரவேண்டும். எல்லோரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேசும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை எம் எல் ஏ சிறப்புரையாற்றி  பேசியதாவது, சுதந்திரத்தை வாங்கி கொடுத்த கட்சி காங்கிரஸ் கட்சி.சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த கட்சி காங்கிரஸ் கட்சி,  வேறு கட்சியினரால் இதை கூற முடியுமா காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கூற முடியும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எல்லோருக்கும் சேர்ந்த சித்தாந்தம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடு உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கொடி தான். கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சியினர் கிராம கமிட்டி உள்ளதா என கேட்கிறார்கள் .100 சதவிகிதம் கிராம கமிட்டி கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம். கிராம கமிட்டிகளை உருவாக்கி வெப்சைட்டில் அதை பதிவு செய்ய இருக்கிறோம். நம்மால் முடியவில்லை என்றால் வேறு யாராலும் செய்ய முடியாது ஆனால் நம்மால் முடியணும் அதற்கு உழைக்க வேண்டும். 100 சதவிகிதம் கிராம கமிட்டியை நாங்கள் அமைக்க இருக்கிறோம். கிராம கமிட்டி எங்கு எங்கு உள்ளது என தலைவர் ராகுல் காந்தி கண்காணிப்பார். மக்கள் சக்தி தான் மிகப்பெரிய சக்தி. இதனை அணி திரட்ட நமக்கு பொறுப்பு உண்டு.  கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் வறை நாங்கள் தூங்கப் போவதில்லை. சந்திர குப்தா மௌரியர் அரசராக இருந்தவர் .அவரது காலம் வரலாறு படைத்த காலம்.அவரது தந்தை அரசரா இல்லை. குதிரை மேய்க்கும் தொழுவத்தில் வாழ்ந்து வந்தவர். நாம் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் சாதிக்க முடியும் நேர்மை இருக்கிறது வீரம் இருக்கிறது எனது இதயம் அதற்கு தயாராக இருக்கிறது என அந்த சிறுவன் முடிவெடுத்தான். இவனை சாணக்கியன் பார்த்தார். இவனது எண்ணம் ராஜாவாக உள்ளது என அழைத்து சிறுவனிடம் பேசினார். உனக்கு தான் ராஜாவாக எல்லா தகுதியும் இருக்கிறது என கூறினார். அதன்படி அவன் அரசன் ஆனான். செய்ய முடியாது என்றால் என்றும் நாம் செய்ய முடியாது செய்ய முடியும் என்றால் செய்ய முடியும். மற்ற கட்சியினர் எல்லாம் எங்களிடம் கமிட்டி உள்ளது என கூறுகிறார்கள் .அதுபோல எங்களிடம் 100 சதவிகிதம் கமிட்டி இருக்கும்.  ராகுல் காந்தியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் , அவர் நல்லாட்சி தரவேண்டும் என விரும்புபவர்கள், ஆங்காங்கே கட் அவுட் வைக்க வேண்டும். இப்படிப்பட்ட தலைவரை நாம் பார்த்ததில்லை .தவறை தவறு என ஒப்புக்கொள்கிறார். எல்லா மக்களுக்கும் தேவையான ஏக்கமாக மருத்துவம் என கூறுகிறார். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களை மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். டிசம்பர் 5ஆம் தேதி வரை அனைத்து பகுதிக்கும் செல்ல வேண்டும். கிராமங்களில் கிராம  கமிட்டி அமைக்க வேண்டும் அதுபோல கட் அவுட்டுகள் வைக்க வேண்டும். கிராம கமிட்டி அமைத்தது வெப்சைட்டில் வரும். இதை வெப்சைட்டில் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் கிராம கமிட்டி போடாதவர்கள் பதவியில் இருந்து போகும் நிலை வரும். எல்லா துறைகளையும் வளைத்து போடுகிறார்கள்.  மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் இந்திய காங்கிரஸ் கட்சி இந்தியாவை தலைமை ஏற்க வேண்டும். தலைவர்  ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என ஆசை நினைத்தால் மட்டும் போதாது அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் கட்சியை பலப்படுத்த வேண்டும். நவம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி க்குள்  கிராம கமிட்டி அமைக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லை எனில் பதவி காணாமல் போய்விடும். உங்களால் முடியவில்லை என்றால் வேறு யாராலும் செய்ய முடியாது எல்லா கட்சிக்கும் எல்லா சித்தாந்தத்திற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை  நிரூபிக்க வேண்டும் . இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார்.
Next Story