பாமக நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பாமக நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வன்னியர் சமூக இளைஞரை தாக்கிய விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து எடப்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .
கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வன்னியர் சமூக இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியதோடு வன்னியர் சங்க மாநில நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்த நபர்களை கண்டித்து சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் வன்னியர் சங்கம் மற்றும் சேலம் தெற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த எடப்பாடி காவல்துறையினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது எனக்கூறி தடுத்ததால் போலீசருக்கும் வன்னியர் சங்க பாமக நிர்வாகிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது. இதனால் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் போலீசார் அனைவரையும் சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து புகார் மனுவை பெற்றுக் கொண்ட பின்னர் அனைவரும் கலந்து சென்றனர்.
Next Story