எடப்பாடி அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
Edappadi King 24x7 |15 Nov 2024 4:28 PM GMT
எடப்பாடி அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் 100 கிலோ அரிசி சாதத்தில் நஞ்சுண்டேஸ்வரரை அலங்கரித்து சிறப்பு பூஜை,கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்த பக்தர்கள்...
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமி திதி மிகவும் சிறப்பானதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு தனி மகத்துவமே உண்டு. இந்த நாளில் மக்கள் தங்களின் பாவங்கள் தீர,புதிய துவக்கங்கள் ஆரம்பமாக இந்த நாளில் அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவனை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும், ஆகவே நாடு முழுவதும் ஐப்பசி பௌர்ணமி நாளான இன்று சிவன் கோயிலில் அன்னாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதே போன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் 100 கிலோ அரிசியில் சமைத்த சாதம் மற்றும் காய்கறிகளை கொண்டு நஞ்சுண்டேஸ்வரரை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த அன்னாபிஷேக சிறப்பு பூசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று நஞ்சுண்டேஸ்வரரை வணங்கி சென்றனர். அன்னபிஷேக சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னாபிஷேக விழா குழுவினர் ஒரு டன் அரிசி கொண்டு சமைத்து உணவை பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளான வெள்ளரி வெள்ளி பசுபதீஸ்வரர், கரட்டுக்காடு மல்லிகேஸ்வரர், அரசிராமணி சோமேஸ்வரர், வெள்ளர்நாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரர்,ஆகிய கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Next Story