மணிப்பூர் கலவரத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு.,

மணிப்பூர் கலவரத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு.,
மணிப்பூர் கலவரத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு., பொள்ளாச்சி.நவம்பர்.,19 மறைந்த முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 107.வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது., இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது., இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்., பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது அன்னை இந்திரா காந்தி இருந்திருந்தால் மணிப்பூர் கலவரம் வராமல் தடுத்து நிறுத்தி இருப்பார் மத்திய அரசு அதை தடுக்க தவறிவிட்டது அன்னை இந்திரா காந்தி மன்னர் மானியத்தை ஒழித்தார் வங்கிகளை தேசிய உடமை ஆக்கி ஏழை எளிய மக்கள் வங்கி கடன் பெறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கினார் அணுகுண்டு சோதனை நடத்தி உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றினார் என்பதில் பெருமை கொள்வதாக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி தெரிவித்தார்., பேட்டி. பகவதி. கோவை தெற்கு மாவட்ட தலைவர்.,
Next Story