சரபங்கா ஆற்றில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சரபங்கா ஆற்றில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
எடப்பாடி நகர பகுதியில் செல்லும் சரபங்கா ஆற்றில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நாச்சியம்மாள் (75), இவர் நவம்பர் 19 தேதி மாலை உடல்நிலை சரியில்லாமல் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பும் போது வெயிலின் தாக்கம் காரணமாக தலை சுற்று ஏற்பட்டதால் சரபங்கா ஆற்றின் கரையில் அமர்ந்துள்ளார், அப்பொழுது எதிர்பாராதமாக விதமாக ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி சேர்ந்த சிலர் எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை  அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சரபங்கா நதியில் அதிக அளவில் சாக்கடை தண்ணீர் நிறைந்து ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் சடலத்தை எடுக்க முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர். அதன் பிறகு சம்பவத்திற்கு வந்த எடப்பாடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சரபங்கா நதியில் அதிக அளவில் ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பற்ற சூழல் இருந்து வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க  கரையோரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story