கரூர் காமராஜர் மார்க்கெட் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
Karur King 24x7 |21 Nov 2024 11:05 AM GMT
கரூர் காமராஜர் மார்க்கெட் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் காமராஜர் மார்க்கெட் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாநகரப் பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு செயல்பட்ட காமராஜ் மார்க்கெட் பழுதடைந்ததன் காரணமாக, வியாபாரிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ரூபாய் 6-கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, தற்போது காமராஜ் மார்க்கெட் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற்ற இந்த பணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் சுதா, மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வியாபாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மொத்தம் 160 கடைகள் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு தற்போது 123 கடைகள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த பணிகளை டிசம்பர் மாதத்தில் முடித்து ஜனவரி மாதத்தில் வியாபாரிகளிடம் கடைகளை ஒப்படைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Next Story