வலிப்பு நோயால் வட இந்தியர் பலி!
Pudukkottai King 24x7 |23 Nov 2024 4:22 AM GMT
துயரச் செய்திகள்
விராலிமலை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பீகார் மாநிலம் நயதோலவை சேர்ந்த அலோக்குமார் நேற்று காலை 9 மணி அளவில் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story