வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Thoothukudi King 24x7 |23 Nov 2024 9:44 AM GMT
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்து விளாத்திகுளம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களுடைய பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் போராட்டங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பார் அசோசியேஷன் சார்பில், விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்களையும், வழக்கறிஞர்கள் சமூக விரோதிகளால் கொடுரமாக கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருவதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் சண்முகராஜ், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் மீது தொடரும் வன்முறைகளுக்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி, வழக்கறிஞர்கள் தங்களது பாதுகாப்பிற்காக தங்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story