கடன் பிரச்சினையால் கணவன் மனைவி விஷம் அருந்தி தற்கொலை.

X
NAMAKKAL KING 24X7 B |27 Nov 2024 11:58 AM ISTசேலம் ரோடு முதலைப்பட்டி ராஜீவ் காந்தி நகரில் ஜிம் மூர்த்தி என்பவரின் வீட்டில் குடியிருந்த குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை
சேலம் ரோடு முதலைப்பட்டி ராஜீவ் காந்தி நகரில் ஜீம் மூர்த்தி என்பவரின் வீட்டில் குடியிருந்த குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் இவர்களுக்கு நிவாஸ் சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளன நிவாஸ் டிரைவர் வேலை செய்து வருகிறார் திருமணம் ஆகாதவர்கள் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றார்கள் இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது இதனால் நாமக்கல் நகரில் பல இடங்களில் நிதி நிறுவனம் மற்றும் தனி நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது பல லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய நிலையில் கடனை திருப்பி கட்ட முடியாத சூழ்நிலையில் கடன் காரர்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் இன்று அவர்கள் தங்கி இருந்த வீட்டிலேயே விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர் இது தொடர்பாக நாமக்கல் நகர போலீசார் இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி விட்டு நஷ்டம் ஏற்பட்டதாகவும் பல இடங்களில் கடன் வாங்கியதாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story
