குடகனாறு பிரச்சனை-கரூருக்கு வரும் முதல்வரை சந்திக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர்.
Karur King 24x7 |29 Nov 2024 9:18 AM GMT
குடகனாறு பிரச்சனை-கரூருக்கு வரும் முதல்வரை சந்திக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர்.
குடகனாறு பிரச்சனை-கரூருக்கு வரும் முதல்வரை சந்திக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர். திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நிறைவு பெறும் குடகனாறு நீர் பெரும்பாலும் கடைமடை பகுதிக்கு வந்து சேர்வதே இல்லை. குடகனாற்று பாசன வாய்க்காலில் போர்வெல் அமைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குடகனாற்றை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்ய அரசு வல்லுனர் குழு ஒன்றை அமைத்தது. வல்லுனர் குழுவும் ஆய்வு செய்து அறிக்கையை தயார் செய்து அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கையை வெளியிடவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை பல வருடங்களாக. இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவராக செயல்பட்டு வரும் ஈசநத்தம் செல்வராஜ்.இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்திற்கு வரும்போது, குடகனாறு தொடர்பாக வல்லுனர் குழு வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டு, அதனை நடைமுறை படுத்த வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரை சந்தித்து மேற்கண்ட பிரச்சினை குறித்து பேச மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று தர வேண்டும் என மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆவண செய்வதாக தெரிவித்தார்.
Next Story