தி.மு.க., மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர்; தங்கமணி பேச்சு
Rasipuram King 24x7 |29 Nov 2024 3:02 PM GMT
தி.மு.க., மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர்; தங்கமணி பேச்சு
ஆளுங்கட்சியான தி.மு.க., மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். இதை நாம் பயன்படுத்திக்கெள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் வேம்புசேகர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தமிழ்மணி, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் தாமோதரன், பொன்னுசாமி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்த கூட்டத்தில் தங்கமணி கூறியதாவது: வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வாக்காளர்கள் திருத்த முகாமும் நடந்து வருகிறது. நமது கட்சி நிர்வாகிகள் உடனிருந்து புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இறந்தவர்கள் வாக்கை நீக்க வேண்டும். தி.மு.க., ஆட்சி மீது மக்களிடம் வெறுப்பு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இந்த ஆட்சி போக வேண்டும் என்று எல்லோருமே பேசிக்கொள்கிறார்கள். அதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க., கடந்த சட்டமன்ற தேர்தலை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளது. நாம் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். ராசிபுரம் மோகனூர் சாலை, கூட்டு குடிநீர் திட்டம், போதலை சாலை என அனைத்து திட்டங்களும் நமது ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. ஆனால், இவைகளை தாம் செய்ததாக ஆளுங்கட்சி பெய்யான தகவலை பரப்பி வருகிறது.என இவ்வாறு தங்கமணி பேசினார்.
Next Story