நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்!

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜேஸ்குமார் எம்பி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலத்தை தொடர்ந்து, தற்போது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கூண்டோடு விலகி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இராஜேஸ்குமார் எம்.பி, முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.சமீப நாட்களாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் விலகி வருகின்றனர். சமீபத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் அக்கட்சியிலிருந்து விலகினார்.கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சில் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் ஆர்வமாக சேர்ந்து வந்தவர்கள், தற்போது அவரது தன்னிச்சயைான செயல்பாடுகளை குற்றம்சாட்டி, படிப்படியாக விலகி வருகின்றனர்.அந்த வரிசையில் நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர்,அக்கட்சியிலிருந்து விலகி, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜேஸ்குமார் எம்பி முன்னிலையில்,தி.மு.க.,வில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு ராஜேஷ்குமார் எம்பி சால்வை அணிவித்து அனைவருடனும் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.இந்த நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ,மாநகராட்சி மேயர் து.கலாநிதி, மாவட்ட அவைத்தலைவர் சி.மணிமாறன், மோகனூர் ஒன்றிய செயலாளர் பெ.நவலடி, மேற்கு நகர செயலாளர் சிவக்குமார், நாமக்கல் ஒன்றிய செயலாளர் செயலாளர் வி.கே.பழனிவேல் மற்றும் திமுக நகர , ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story