நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் தற்கொலை!-பெற்றோர்கள் அதிர்ச்சி

தற்கொலை எண்ணங்களை முறியடிப்பதற்கான உதவியானது மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104, டெலி-மனஸ் 14416 மற்றும் சினேகாவின் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044 24640050 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ மாணவிகளின் ஆர்வம் இருந்து வந்தது. அன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை எடுத்து படிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதி வழங்கி வந்தனர். ஆனால் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப இதைத் தான் படிக்க வேண்டும் இந்த பள்ளியில் தான் படிக்க வேண்டும் இந்த கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஒன்றும் பேச முடியாமல் மனதளவில் ஏற்றுக் கொள்ளாமல் பெற்றோர்களின் எண்ணத்திற்கு பள்ளி, கல்லூரிகளில் படித்து வந்தனர்.அதிலும் பள்ளி கல்லூரிகளில் கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் பணிகளுக்கு பயந்து மனதளவில் பாதிக்கப்பட்டு பள்ளியை விட்டு தப்பித்தவர்களும் இருக்கிறார்கள். படிப்பதற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளமானோர்.இதற்காக அரசின் சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும்
மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்துடன் போராடுபவர்கள் அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவர 24 மணி நேரமும் 24 மணிநேர ஆலோசனை மையத்தை 14416 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொடுத்து அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க முயற்சியும் எடுத்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களின் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது..எதிர்கால நாட்டின் தூண்களான மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில் அரசு பல முன்னெடுப்புகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்களை முறியடிப்பதற்கான உதவியானது மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104, டெலி-மனஸ் 14416 மற்றும் சினேகாவின் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044 24640050 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு என்னதான் முயற்சி செய்தாலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை குழந்தைகள் மேல் திணிக்காமல் அவர்களை எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மன தைரியத்துடன் வளர்ப்பதே இப்பிரச்சனைக்கு சரியான தீர்வு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story