மது போதையில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய கணவர் கைது.
Thoothukudi King 24x7 |29 Nov 2024 3:46 PM GMT
தூத்துக்குடியில் மது போதையில் மருத்துவமனையில் நுழைந்து பெண் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய கணவர் கைது.
தூத்துக்குடி பாத்திமா நகர் 1 வது தெருவை சேர்ந்தவர் மருத்துவர் ரேவதி (36) இவர் பிரையண்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார், இவர் டேனியல் என்பவரை காதலித்து திருமணம் முடித்துள்ளார், இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறு வேறுபாடு காரணமாக ரேவதி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் மது போதையில் மருத்துவமனையில் நுழைந்த டேனியல் ராஜ் ரேவதியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார் அதற்கு அவர் மறுக்கவே, அவரை கைகளால் தாக்கி காயப்படுத்தி உள்ளார் இதுகுறித்து மருத்துவர் ரேவதி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு டேனியல்ராஜை கைது செய்தனர். மருத்துவமனையின் நுழைந்து மருத்துவரை மது போதையில் அவரது கணவர் தாக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story