திமுக மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும் - பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி.
Edappadi King 24x7 |29 Nov 2024 4:27 PM GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி நகர பகுதியில் பாமக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசுடன் அதானி குழுமம் தொடர்பு குறித்து உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில் பாமக சார்பில் உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும் என்று எடப்பாடியில் பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பாமகசெயல்பாடுகள் குறித்து ஒன்றியம்,நகரம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர நிர்வாகி பாமக நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் வெள்ளாண்டி வலசு தனியார் திருமண மண்டபத்தில் பாமக செய்தி தொடர்பாளரும் சமூக நீதி பேரவை தலைவரும் வழக்கறிஞர் பாலு தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக வெற்றி பெற அனைத்து நகர பேரூர்,ஒன்றிய பகுதிகளில் பாமகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருவதாகவும், தமிழக முதல்அமைச்சருக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பாலு அமெரிக்க அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததில் தமிழக மின்சார துறையின் பெயர் இடம்பெற்றது எப்படி எனவும் இது சம்மந்தமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை எனவும் ஏன் விசாரணை செய்யவில்லை ஜூலை 16 அதானி குழுமம் தமிழக முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்ததாக செய்திகள் வெளியானது உண்மையா எனவும் இது சம்பந்தமாக தமிழக அரசு ஏன் ரகசியம் காத்து வருகிறது. என்றும் அதானியும் தமிழக முதலமைச்சரும் சந்தித்ததின் மர்மம் என்ன நோக்கம் சந்திப்பதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுப்பினார். அமெரிக்கா நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மின்சார நிறுவனமும் அதானி பெயரும் அமெரிக்கா நீதிமன்ற குற்ற பத்திரிக்கையில் இடம்பெற்றது மின்சாரம் விற்கப்பட்டதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மின்சார கடன் பல கோடி நஷ்டத்தில் ஈடுபட்டு வருகின்ற இந்நிலையில் தனியார் சோலார் சிஸ்டம் வாங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது சம்பந்தமாக தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர போவதாகவும் கூறினார். பாமக நிறுவனர் குறித்து தமிழக முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசியது பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலை அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியவர்களை தமிழக அரசு கைது செய்து இரவு 10 மணி வரை விடுவிக்காமல் அடக்கு முறையை கையாண்டு வருவதாகவும் ராணிப்பேட்டையில் 13 பாமக நிர்வாகிகளை ஜாமினில் வெளி வராதபடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் பற்றி அவதூறாக பேசிய முதல்வர் ஸ்டாலின் இதுவரை மன்னிப்பு அல்லது வறுத்தம் தெரிவிக்க வில்லை என பாமக சார்பில் வலியுறுத்தி வந்த போதும் இதுவரை முதல்வர் எதுவும் பேசவில்லை.. அதற்காக வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறாதபடி பாமக ஒரு மாபெரும் கூட்டணி அமைக்கும் எனவும் சமூக நீதிகாவலர் ராமதாஸ் அவர்களை அவதூராக பேசிய முதல்வர் குறித்து மாற்று கட்சி தலைவர்கள் ஒரு சிலரை தவிர மற்ற எவரும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது எனவும், முதல்வர் பேசியது சரி என வைகோ பேசியது கண்டனத்துக்குறியது எனவும் கூறினார்.. அப்போது.மாநில இளைஞரணி செயலாளர் செந்தில்,தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார்,தெற்கு மாவட்ட தலைவர் ப.முத்துசாமி,மாநில செயற்குழு உறுப்பினர்கள் ந. அண்ணாதுரை, S.P. ராமர், குமரசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் C K. ரவி, நகர செயலாளர் KPM சண்முகம், நகர தலைவர் துறைசாமி, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர ஏழுமலை மற்றும் மாரியப்பன், மூர்த்தி, ரமேஷ், வைத்தி, அய்யாசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் என பலரும் உடனிருந்தனர்.
Next Story