வேளாண் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்திட விவசாயிகள் முன் வர வேண்டும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

வேளாண் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்திட விவசாயிகள் முன் வர வேண்டும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
வேளாண் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்திட விவசாயிகள் முன்வர வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, விவசாய பெருமக்களுக்கு அழைப்பு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது, நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (27.11.2024) 744.72 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 63.94 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரை நெல் 5,969 எக்டர், சிறுதானியங்கள் 64,924 எக்டர், பயறு வகைகள் 9664 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 27,851 எக்டர், பருத்தி 1,599 எக்டர் மற்றும் கரும்பு 7,797 எக்டர் என மொத்தம் 1,17,804 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 498 எக்டர், கத்திரி 294 எக்டர், வெண்டை 253 எக்டர், மிளகாய் 185 எக்டர், மரவள்ளி 1,764 எக்டர், வெங்காயம் 2,599 எக்டர், மஞ்சள் 1,929 எக்டர் மற்றும் வாழை 2,223 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 1,963 மெ.டன், டிஏபி 1,283 மெ.டன், பொட்டாஷ் 1236 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 448 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2,568 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் நாளது தேதி வரை 985.9 எக்டர் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் துணை இயக்கம் திட்டம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டர், ரோட்டாவேட்டர், பவர்டில்லர், கலப்பைகள், களை எடுக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிரெய்லர், தெளிப்பான், கரும்பு தோகை துகளாக்கும் கருவி போன்ற வேளாண் கருவிகள் 50 சதவிகித அரசு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மின் மோட்டார் மானியத்தில் அமைத்தல் திட்டத்தின் கீழ் பழைய திறனற்ற மின் மோட்டார் பம்ப்செட்டுகள் / புதிய கிணறுகளுக்குப் புதிய மின்மோட்டார் பம்ப்செட் மானியத்தில் வழங்கும் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக பொதுப் பிரிவில் 50 எண்களும், சிறப்புப் பிரிவில் 30 எண்களும், பழங்குடியினர் பிரிவில் 5 எண்களும் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் – 2024-25-ல் 53.41 ஹெக்டர் உழவுப் பணிகள் முடிக்கப்பட்டு ரூ.2.848 இலட்சம் மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர் மற்றும் பரமத்தி-வேலூர் ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகிறது. மொத்தம் 412 கடைகள் செயல்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 530 விவசாயிகள் 78.96 மெ.டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.32.49 இலட்சம் மதிப்புள்ள விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, திருச்செங்கோடு மற்றும் பரமத்தி-வேலூர் ஆகிய 6 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பரமத்தி-வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் e-NAM தேசிய மின்னணு வேளாண் சந்தை மூலம் 5295 விவசாயிகளும், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் e-NAM தேசிய மின்னணு வேளாண் சந்தை மூலம் 387 விவசாயிகளும், விலை ஆதரவு திட்டம் (PSS) மூலம் பரமத்தி-வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 367 விவசாயிகள், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 308 விவசாயிகளும், பந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு 4 விவசாயிகளும், திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 334 விவசாயிகளும் பயன்பெற்றுள்ளனர். தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து சூறை காற்றினால் சேதமடைந்த 40 விவசாயிகளின் பாக்கு, வாழை மற்றும் புடலை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.3.09 இலட்சம் நிவாரண தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கிய பள்ளிபாளையம் வட்டாரத்தை சார்ந்த விவசாயி திரு.வே.பழனிசாமி அவர்களுக்கு ரூ.15,000/- மற்றும் எலச்சிபாளையம் வட்டாரத்தை சார்ந்த விவசாயி திரு.க.பழனிசாமி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.10,000/-, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப. அவர்கள் விவசாய பெருமக்களை சிறப்பித்தார். மேலும் விவசாய பெருமக்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா.மல்லிகா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே. சுகந்தி (திருச்செங்கோடு), வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைசெல்வி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) க.இராமச்சந்திரன் பெ. கலைச்செல்வி துறைசார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story