கரூர் அருகே கல்குவாரியில் பழைய இரும்பை எடுக்க வியாபாரியை போல வந்து செய்த தில்லு முல்லு. நான்கு பேர் கைது. லாரி மற்றும் கார் பறிமுதல்.
Karur King 24x7 |30 Nov 2024 10:40 AM GMT
கரூர் அருகே கல்குவாரியில் பழைய இரும்பை எடுக்க வியாபாரியை போல வந்து செய்த தில்லு முல்லு. நான்கு பேர் கைது. லாரி மற்றும் கார் பறிமுதல்.
கரூர் அருகே கல்குவாரியில் பழைய இரும்பை எடுக்க வியாபாரியை போல வந்து செய்த தில்லு முல்லு. நான்கு பேர் கைது. லாரி மற்றும் கார் பறிமுதல். கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கார்வழி கிராமத்தில் செயல்பட்டு கரூர் வரும் ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் இருந்த பழைய இரும்பை கொள்முதல் செய்வதற்காக நவம்பர் 13 ஆம் தேதி கோவையைச் சேர்ந்த ரகுமான் என்பவர் TN37 CF 2523 என்ற காரில் வந்துள்ளார். அங்குள்ள இரும்பை ஏற்றுவதற்காக TN37 CJ 3847 என்ற பதிவெண் கொண்ட பென்ஸ் லாரியையும் கொண்டு வந்தனர். பிறகு லாரியில் இரும்பை ஏற்றிக்கொண்டு லாரியில் ஏற்றப்பட்ட இரும்பின் அளவை அறிந்து கொள்வதற்காக எடை போடும் நிலையத்திற்கு லாரியை கொண்டு சென்றனர். இதனிடையே இரும்பு ஏற்றி வந்த லாரியை நிறுத்திவிட்டு,கல் மற்றும் மண் ஏற்றப்பட்ட அதே மாதிரி உள்ள வேறொரு லாரியை எடை போடும் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது காரில் வந்த, இரும்பை விற்பனை செய்த கரூர் ப்ளூ மெட்டல் நிறுவனத்தினுடைய ஊழியர்கள், லாரியை மாற்றி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால், காரில் வந்த ரகுமான், கரூர் ப்ளூ மெட்டல் நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு, காரையும் லாரியையும் எடுத்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் ரகுமான் உள்பட மொத்தம் ஆறு பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, தென்காசி மாவட்டம், மேல கடைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் வயது 29 என்பவர் அளித்த புகாரின் பேரில், மேற்கண்ட குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை செய்து, இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று நவம்பர் 29ஆம் தேதி தென்னிலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வைரமடை பகுதியில் செயல்படும் சோதனை சாவடியில் காவல்துறையினர் நடத்திய வாகன தணிக்கையின் போது,மேற்கண்ட குற்ற செயலில் ஈடுபட்ட கோவை மாவட்டம், கரும்புக்கடை, பள்ளி வீதியைச் சேர்ந்த சிக்கந்தர் வயது 37, அதே பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் வயது 34, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்த காதர் அலி வயது 35 , கோவை மாவட்டம் போத்தனூர் சாய் நகர், 2-வது தெருவை சேர்ந்த மற்றொரு காதர் அலி வயது 40 ஆகியோரை கைது செய்து, தில்லு முல்லு விவகாரத்திற்காக பயன்படுத்திய பென்ஸ் லாரி மற்றும் ஸ்விப்ட் காரையும், ரூபாய் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த குற்ற செயலில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால், அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Next Story