காந்தி நகரில் நடந்து சென்ற மூதாட்டி மீது இளைஞர் வேகமாக ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
Karur King 24x7 |30 Nov 2024 11:21 AM GMT
காந்தி நகரில் நடந்து சென்ற மூதாட்டி மீது இளைஞர் வேகமாக ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
காந்தி நகரில் நடந்து சென்ற மூதாட்டி மீது இளைஞர் வேகமாக ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம் காந்தி நகர் 8-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி சரசு வயது 59. இவர் நவம்பர் 28ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில், வேலாயுதம் பாளையத்திலிருந்து நொய்யல் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர் 8-வது கிராஸ் பகுதியில் நடந்து கொண்டிருந்தபோது, புகலூர் தாலுகா கட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் தமிழரசன் வயது 26 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற சரசு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரசுவை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சரசுவின் மகன் கனகராஜ் வயது 46 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய தமிழரசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story