ராசிபுரம் அருகே கணவன் மீது மிளகாய் பொடி தூவி கொதிக்க கொதிக்க இருந்த சமையல் எண்ணெய்யை மேலேற்றிய மனைவி கைது
Rasipuram King 24x7 |30 Nov 2024 3:53 PM GMT
ராசிபுரம் அருகே கணவன் மீது மிளகாய் பொடி தூவி கொதிக்க கொதிக்க இருந்த சமையல் எண்ணெய்யை மேலேற்றிய மனைவி கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம்முனியப்பன் பாளையம் பகுதியில் சேர்ந்த அஜித்குமார்(27) ராதா(24)தம்பதியினர் க்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த 3 மாதத்திற்கு மேலாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை பார்க்க சென்றபோது அப்போது மனைவி கணவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் மனைவி தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளிய காத்திருந்த கணவன் மீது மிளகாய் பொடி தூவி கொதிக்க கொதிக்க இருந்து எண்ணையை கணவன் மேலே ஊற்றியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் கணவன் மீது சமையல் எண்ணெய்யை ஊற்றிய மனைவி ராதாவை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story