அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்!

குற்றச்செய்திகள்
விராலிமலை, கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு ரோடு பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் செந்தில்நாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
Next Story