தாந்தோணி மலை-பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றிய பக்தர்கள்.

தாந்தோணி மலை-பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றிய பக்தர்கள்.
தாந்தோணி மலை -பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றிய பக்தர்கள். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளையின் சார்பாக 7-ம் ஆண்டு பூக்குழி (ஆழி) இறங்கும் திருவிழா நடைபெற்றது. நவம்பர் 26 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவானது பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்தது. நேற்று முன் தினம் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு 7 கன்னிகளுக்கு அருள் அழைத்து, நெய் விளக்கு ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திரண்டு பூக்குழி (ஆழி) இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி (ஆழி) இறங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தவாறு பூக்குழி திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக ஏழு கன்னி பெண்கள் பூக்குழி (ஆழி) இறங்கிய பின் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, தாரை தப்பட்டை உடன் ஐயப்பன் திடலில் இருந்த அம்மன் கரகம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டை தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளையின் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story