ஜோலார்பேட்டை அருகே மின் மோட்டார் இன்றி ஆழ்துளை கிணற்றில் தானாக வெளியேறி வரும் தண்ணீர்...

ஜோலார்பேட்டை அருகே மின் மோட்டார் இன்றி ஆழ்துளை கிணற்றில் தானாக வெளியேறி வரும் தண்ணீர்...
X
ஜோலார்பேட்டை அருகே மின் மோட்டார் இன்றி ஆழ்துளை கிணற்றில் தானாக வெளியேறி வரும் தண்ணீர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மின் மோட்டார் இன்றி ஆழ்துளை கிணற்றில் தானாக வெளியேறி வரும் தண்ணீர்... திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்ணாங்குப்பம் கிராமத்தில் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து விவசாயத்திற்கு ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். அதேபோன்று பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து தான் தண்ணீரை எடுத்துச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் இன்றி தண்ணீர் தானாகவே வெளியேறி வருவதால் அப்பகுதியில் இருக்கக்கூடிய ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டாரை கழற்றிவிட்டு தற்பொழுது தண்ணீர் தானாகவே வெளியேறி வருவதால் அதனை வாழ்வு மூலமாக அடைத்து வைத்து தேவைப்படும்போது திறந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில் கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதியில் ஏரி நிரம்பியுள்ளதால் தற்பொழுது ஆழ்துளை கிணறில் மின்மோட்டார் இன்றி தண்ணீர் வெளியேறி வருவதால் அதனை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story