தீண்டாமை பாகுபாடு : தூய்மை பணியாளர் சங்கம் புகார்!

X
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுவதாக தூய்மை பணியாளர் சங்கம் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் சுடலை மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் கீழ் சாதி, மேல் சாதி என பிரித்து வேலைக்கு அனுப்பபடுவதாக தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. கீழ் சாதி பணியாளர்கள் வாறுகால், குப்பைகள் அள்ளுவதற்கும் மேல் சாதியினர் மேற்பார்வையா, பூங்கா தண்ணீர் திறந்து விடுதல், அலுவலக உதவி போன்ற பணிக்கும் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

