முத்தையாபுரம் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு

X
தூத்துக்குடி முத்தையாபுரம் முகைதீன் ஆண்டவர் ஜீம்ஆ பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி முத்தையாபுரம் முகைதீன் ஆண்டவர் ஜீம்ஆ பள்ளிவாசல் ஜமாத்தார்கள் கூட்டம் புகாரிதங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜமாத் தலைவராக அல்ஹாஜ் என்.செய்யது மரைக்காயர், செயலாளராக முகம்மது, பொருளாளராக மஜீத், துணைத் தலைவராக ஷேக் முகம்மது, துணைச் செயலாளராக சம்சுகனி மரைக்காயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக அப்பாஸ், கமால்தீன், சிக்கந்தர், ஹாஜி, சிராஜீதீன், முகமது ராபிக், சம்ஜத் உசேன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் ஜமாத்தார்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அல்ஹாஜ் மீராசா மரைக்காயரைநேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Next Story

