வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வனச்சரகத்திற்குட்பட்ட பெல்ரம்பட்டி, திருமல்வாடி, சீங்காடு, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்ட அள்ளி ஆகிய பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்து கொட்டகைகள் அமைத்தும், வீடு கட்டியும் உள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆக்கிரப்புகளை அகற்றுமாறு கூறினர். தொடர்ந்து இன்று டிசம்பர் 10 காலை பாலக்கோடு வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவர்கள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என ஜிட்டாண்டஅள்ளி, மாரவாடி, கொத்தலம், குண்டாங்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
Next Story



