சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை(டிச.11) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊா்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என கோட்டப்பொறியாளா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
Next Story

