வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
X
நாளை டிசம்பர் 11ம் தேதி நாமக்கல் நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
வணிகர்களும், பொதுமக்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நாளை 11/12/2024 புதன்கிழமை தமிழகம் முழுக்க, மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.மத்திய அரசின் வாடகையின் மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்பபெற வலியுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும், TRAI விதிமுறைகளை மீறி சாலை ஓரங்களில் குடைகள் அமைத்து சிம் கார்டு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாமக்கல் நகர், பூங்கா சாலையில் 11/12/2024 புதன்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை தாங்குகிறார்.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணை தலைவர்கள் வேலகவுண்டம்பட்டி ஆர்.செல்வராஜ், வெண்ணந்தூர் பி.ஆர்.கே.சுப்பிரமணியம், எஸ்.சங்கர் மற்றும் மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பேரமைப்பின் மாநில மூத்த துணை தலைவர் எஸ்.பெரியசாமி கண்டன ஆர்பாட்ட விளக்க உரையாற்றுகிறார். பேரமைப்பின் இணைப்பு சங்கங்களின் தலைவர்கள் கண்டன சிறப்புரை ஆற்றுகின்றனர். பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் எஸ்.கே.சீனிவாசன் நன்றியுரை ஆற்றுகிறார்.பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரமைப்பின் 46 இணைப்பு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆர்பாட்டத்தில் சங்கம் சாரா வணிகர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொள்கிறார்கள்.
Next Story