குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் நீர்வீழ்ச்சி அருகே சரக்கு ஆட்டோ தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது........

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் நீர்வீழ்ச்சி அருகே சரக்கு ஆட்டோ தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது........
X
குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் நீர்வீழ்ச்சி அருகே சரக்கு ஆட்டோ தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது........
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாஸ் நீர்வீழ்ச்சி அருகே சரக்கு ஆட்டோ தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது........ நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நஞ்சப்பசத்திரம் இப்பகுதியை சேர்ந்தவர் ரங்கநாத சாமி சரக்கு ஆட்டோவைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் இன்று மாலை நஞ்சப்ப சத்திரம் பகுதியில் இருந்து ரங்கநாத சாமி தனது சரக்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது சரக்கு ஆட்டோவில் ஏதோ வெடிப்பது போல் சப்தம் கேட்டதால் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை விட்டு இறங்கினார் அப்பொழுது  ஆட்டோ தீ பற்றி மளமளவென எரிய துவங்கியது தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது மேலும் சரக்கு ஆட்டோ தீ பற்றி எரிந்தது குறித்து குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story