கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்த பூக்களை தர்மபுரி பேருந்து பூ மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இன்று கார்த்திகை தீபத் திருவிழா என்பதால் அதிகாலை முதலே தர்மபுரி பூ மார்க்கெட் கலகலப்பாக இருந்தது. தொடர் மழையிலும் ஏராளமான பொதுமக்கள் பூக்கள் வாங்க குவிந்தனர். இன்று டிசம்பர் 13 குண்டு மல்லி ஒரு கிலோ 1000 ரூபாய், சன்னமல்லி ஒரு கிலோ 900 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ 500 ரூபாய், ஜாதி மல்லி ஒரு கிலோ 400 ரூபாய், சம்பங்கி ஒரு கிலோ 120 ரூபாய், சாமந்தி பூ 140 ரூபாய்,பட்டன் ரோஜா 200 ரூபாய், செண்டு மல்லி ஒரு கிலோ 50 ரூபாய், அரளி ஒரு கிலோ 300 ரூபாய். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக தர்மபுரி பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story



