கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் பொற்கலா நகர் பகுதியில் வசிக்கும் முத்துகிருஷ்ணன் என்பவர் திருமங்கலம் சப்ஜெயிலில் கடந்த எட்டு வருடமாக சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன்(19) என்பவர் மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் . இவர் அடிக்கடி புகையிலை பொருட்களை பயன்படுத்தி வந்தது தெரிந்ததால் பெற்றோர்கள் இவரை கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியில் கார்த்திகேயன் நேற்று (டிச.13) காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

