தமிழ் புலிகள் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் புலிகள் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
X
கோவில் நடைபெறும் 2025 ஏப்ரல் மாநாட்டிற்கு பெரும்பான்மையானோர் புதுச்சத்திரம் ஒன்றியத்திலிருந்து தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டினை வெற்றி பெற செய்திட வேண்டும் என தமிழ் புலிகள் கட்சி பல்வேறு தீர்மானங்களை கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள்.
எதிர்வரும் ஏப்ரல் 2025 கோவையில் நடைபெறும் மாநாட்டிற்கு பெரும்பான்மையானோர் புதுச்சத்திரம் ஒன்றியத்திலிருந்து தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டினை வெற்றி பெற செய்திட வேண்டும் என இச்செயற்குழு கூட்ட தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது காலதாமதம் இன்றி மிகத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறையை இந்த செயற்குழு கூட்டம் வலியுறுத்துகிறது. சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீதும், சந்து கடை நடத்துபவர்கள் மீதும் நாமக்கல் மாவட்ட காவல்துறை இச்சம்பவங்களை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு கூட்டத்தின் மூலம் மாவட்ட காவல் துறையை வலியுறுத்துகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பட்டிலின மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி கொடுக்கக்கூடிய கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணும் விதமாக கள ஆய்வுகளை மேற்கொண்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய கோரிக்கை மனுக்கள் மீதும், புகார் மனுக்கள் மீதும் மிகத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு கூட்டத்தின் மூலம் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது. புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாட்டு உபகரணங்கள் கொடுத்து இளைஞர்களை ஊக்கப்படுத்தி சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு கூட்டமானது மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது. புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தொழில் ரீதியாகவும், பள்ளிக்கு செல்லக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு விதமான பணி சம்பந்தமாக ஒரு நாளைக்கு சுமார் 500 க்கும் மேற்பட்டோர் சென்று வரக்கூடிய சூழ்நிலையில் ஒரு சில குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே உள்ளே வந்து செல்கிறது. எனவே புதுச்சத்திரம் வழியாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு உள்ளே வந்து செல்லும் வகையிலும், இரவு நேரங்களில் புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையிலும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமானது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு கூட்டமானது வலியுறுத்துகிறது. புதுச்சத்திரம் ஒன்றியத்தில் சட்டவிரோத மது விற்பனை செய்யக்கூடிய நபர்கள் மீதும் சந்து கடை நடத்தக்கூடிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனு மீது போதிய நடவடிக்கை எடுக்காமலும், வன்கொடுமை சம்பந்தமான புகார்களில் நடவடிக்கை எடுக்காமல் சாத்தியவாதிகளுக்கு சாதகமாக அல்லது உடந்தையாக செல்லக்கூடிய புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி கோமதி அவர்கள் மீதும் மற்றும் வன்கொடுமை சம்பந்தமான புகாரினை பாதிக்கப்பட்டவரிடம் பெற்றுக்கொண்டு காவல் ஆய்வாளரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லாமல் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்த்திய நபருக்கு சாதகமாக வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராக எழுதி வாங்கிக்கொண்டு சமரசம் செய்து வைத்த காவல் இணை ஆய்வாளர் அன்பில் ராஜ் அவர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட காவல்துறையை தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.
Next Story