தூசூர் ஏரி நிரம்பி வழிகிறது விவசாயிகள் மகிழ்ச்சி.

X
NAMAKKAL KING 24X7 B |17 Dec 2024 11:46 AM ISTதொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி நிரம்பி வழிகிறது விவசாயிகள் மகிழ்ச்சி.
நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையால் கொல்லிமலையில் இருந்து வந்த நீர் ஏரியை நிரப்பி உள்ளது இந்த ஏரி 543 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய பாசனங்களுக்கு பயனளிக்கக் கூடியதாக உள்ளது 66.87 மில்லியன் கன அடி கொண்ட இந்த ஏரி தற்போது முழுமையாக நிரம்பி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது இதனால் நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான இந்த தூசூக ஏரி நிரம்பியதை வேடிக்கை பார்க்க பகுதி மக்கள் குழுமி உள்ளனர் மேலும் இந்த ஏரி நிரம்பியதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள்
Next Story
