விபத்து முதியவர் பலி !

விபத்து முதியவர் பலி !
X
சிறுவாணி சாலையில் பேருந்து மோதியதில் முதியவர் பலி- ஓட்டுநர் நடத்துனர் தப்பி ஓட்டம் !
கோவை,சிறுவாணி மெயின் ரோட்டில் நேற்று நடந்த விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற 87 வயதான கோவிந்தசாமி என்பவர் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பேத்தியை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பிய கோவிந்தசாமி, கடையில் பொருள் வாங்க சென்றபோது பின்னால் வந்த பேருந்து அவரது ஸ்கூட்டரை மோதியது. இதில் கால்கள் பஸ் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் நடந்தவுடன் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலந்துறை போலீசார் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story